ஆலய பரிபாலன சபையினரது வலைப்பூ
Wednesday, July 20, 2016
Monday, July 18, 2016
14ம் திருவிழா - இரதோற்சவம் 2016
அல்வையம் பதியினிலே அன்னையாய் அமர்ந்தவளே
அகிலமே உன் அடக்கம் அகிலாண்ட நாயகியே
அருட்ப்பார்வை தந்திடுவாய் அன்னை முத்து மாரியம்மா
அம்மையாய் நான் வணங்கும் ஆனைமுகன் தாயவளே
வேவிலந்தை பதியினிலே விரும்பி உறைபவளே
வேண்டும் வரம் தந்திடுவாய் வேலனை பெற்றவளே
வேப்பிலையை கைப்பிடித்தே வீதி வலம் வந்திடுவாய்
வேதனைகள் தீருமம்மா வேவிலந்தை மாரியம்மா
முப்பத்து முக்கோடி தேவர்களும் வணங்கிடவே
மூவுலக மாந்தர்களும் முன்வந்து போற்றிடவே
மனக்குறைகள் தீருமம்மா மகமாயி மாரியம்மா
மத்தள மேளமுடன் மணியோசை ஒலித்திடவே
பச்சை நிற பட்டுடுத்தி பதக்கங்கள் பல தரித்து
பாதங்கள் இரண்டிலுமே சதங்கைகள் ஒலித்திடவே
பிள்ளைகளை காத்திடுவாய் பெற்றவளே மாரியம்மா
பிறை போன்ற நெற்றியிலே குங்கும திலகமிட்டு
கற்ப்பூர ஜோதியிலே களிப்புடன் வீற்றிருப்பாய்
கருமாரி ஆனவளே உரு மாறி வருபவளே
பாவி என்னை காத்திடுவாய் பராசக்தி மாரியம்மா
பாற்கடலில் பள்ளிகொள்ளும் பரந்தாமன் தங்கையரே
அண்டங்களை காத்திடவே அல்வையில் கோயில் கொண்ட
ஆனந்த பைரவியே ஆதிபராசக்தியம்மா
ஆயிரம் கண்ணுடைய அல்வாய் முத்துமாரியம்மா
ஆனந்த கூத்தாடும் ஆதிசிவன் பாதியம்மா
(ஆக்கம் : தமயந்தி சந்திரதாஸ்)
Special thanks to N.Kanesh for camera.
Subscribe to:
Comments (Atom)






