ஆலய பரிபாலன சபையினரது வலைப்பூ

அல்வாய் வேவிலந்தை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்

Sunday, June 16, 2013

மோசமான நிலையில் பாலம்

அல்வாய் பாலமானது இரு பக்கமும் இடிந்த நிலையில் நடுவில் ஓர் ஒற்றையடி பாதை போன்று ஒருவர் மட்டுமே செல்லக்கூடியதான நிலையில் உள்ளது என்னும் ஓரிரு வாரங்களில் அதுவும் இடிந்து பாலமே முழுமையாக சேதமாகிவிடும் நிலையில் காணப்படுகின்றது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தபோதிலும் எதுவித பயனும் கிடைக்கவில்லை.







இதனால் முத்துமாரி அம்மன் திருவிழா காலங்களில் வடஅல்வாய் முருகன் ஆலயத்திற்கு (பெரிய தம்பிரான்) வேட்டை திருவிழாவின்போது வேட்டையாட இவ்வழியாலேயே செல்வது வழமை. அதனைபோன்று இறுதி திருவிழாவான தீர்த்தோற்சவதிலன்றும் இப் பாலத்தை கடந்தே இன்பர்சிட்டி கடற்கரைக்கு செல்வதுண்டு ஆனால் இம்முறை வருகின்ற மாதம் திருவிழா ஆரம்பமாக இருக்கின்றதால் இவ் இரண்டு திருவிழாக்களும் பெரும் இடஞ்சலினை எதிர்நோக்க நேரிடும்.