ஆலய பரிபாலன சபையினரது வலைப்பூ

அல்வாய் வேவிலந்தை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்

ஆலய வரலாறு


ஓம் சக்தி
'சக்தி சக்தி சக்தி சக்தி சக்தி என்றோத
சக்தி சக்தி சக்தி என்பார் சாகார் என்றோது'
-பாரதியார்-

ஒரு நோக்கு:
பயணமாகிற நேரமிது இதனால் அல்வை வேவிலந்தை முத்துமாரிஅம்மன் திருத்தலம் பற்றி நான் படித்ததெரிந்து கொண்ட சில வரலாற்று நிகழ்வுகளை இளையதலைமுறையினரும் அறிந்து கொள்ளவேண்டுமென்கின்ற அவாவினால் இங்கே பதிவு செய்கின்றேன். இதற்கு முன்பு எழுதிய பல வரலாற்றின் சுருக்கத்தினை சற்றுவிரிவாக எழுதுமாறு பரிபாலனசபை கேட்டுக்கொண்டதற்கிணங்க பேனாவை தூக்கியுள்ளேன். 

முன்னுரை:
கோயில்கள் சைவநெறி தழைத்தொங்கவும் மானிடம் உலகவாழ்வு ஊடாக ஆன்மீக நெறியில் சென்று இறைதிருவடிப்பேறு பெற்று பேரின்பம் பெறவும் நம்முன்னோர் ஊர்கள் தோறும் ஆலயங்கள் அமைத்து வழிபட்டு உய்தனர். ஊலகெலாம் உணர்ந்தோர்க்கு அரியவனாகிய இறைவனை  எளியாராக்கி திருக்கோயில்களில் எழுந்தருளச்செய்தனர் தனிமனித மனங்களில் கருக்கொண்டே கோயிலின் தோற்றம் நிலையான கோயில்களாயின.
அக்காலத்தில் தமிழ்த்திருநாட்டில் அரச கட்டிலிலிருந்த சேர, சோழ, பாண்டிய நாயக்க மன்னர்கள் திராவிட சிற்பக்கலையினை வடித்துப்பிரமாண்டமான கோயில்களை எடுப்பித்தனர் தஞ்சைப் பெருங்கோயிலும் இராஜேந்திர சோழன் கட்டிய இராமேஸ்வரம் மதுரை மீனாட்சி போன்றவை உதாரணமாகும்.
குடியிருக்கும் இடமெல்லாம் கோயில் கண்டவர்கள் தமிழர்கள்அவ்வாறு கட்டப்பெற்று இன்று பிரசித்தி பெற்று விளங்குவதுதான் அல்வை வேவிலந்தை ஸ்ரீமுத்துமாரிஅம்மன் திருத்தலம்.
அலைமருவி விளையாடும் அலைவாய் என்ற பெயர் திரிந்து அல்வாய் ஆனதோ ஆலவாய் எனப்படும் மதுரையுடன் தொடர்பு கொண்டிருந்தமையால் திரிவுபட்டு அல்வாய் ஆனதோ எப்படி இருப்பினும் இன்று அம்பிகை கொழுவிருக்கும் ஊர் அல்வாய்தான்.
வேவிலந்தை என்பது திருத்தலம் அமைந்துள்ள காணியின் பெயர் வேம்பும், இலந்தையும் பிண்ணிப்பிணைந்து இருந்தமையால் வேவிலந்தை என்ற காரணப்பெயர் உண்டாயிற்று என்றும் கூறுவர்.

சிவசக்தி
பஞ்சகிருத்தியங்களின் போது சிவசக்தியாக தோற்றமளிக்கும் ஆதிசக்தியான உமை பல்வேறு வடிவங்களில் மக்களால் வணங்கப்படுகின்றாள். வள்ளிநாச்சியார், மதுரையம் பதயிலிருந்து அம்மன் திருவுருவச்சிலையை எடுத்துவந்த போது நாட்டில் சின்னம்மை, பெரியம்மை போன்ற நோய்கள் பரவின. இவை அம்மையின் திருவிளையாடல்தான் என்று மக்கள் நம்பினர் அருள்மாரி பொழிந்து அன்னை காப்பாள் என உணர்ந்து முத்துமாரி அம்மன் என திருநாமம் இட்டனர் போலும் எனவேதான் இன்று அல்வை வேவிலந்தை முத்துமாரி என பேசப்படுகின்றாள் எம் அன்னை.

ஆலய வரலாற்றுப் படிமுறை ஓவியங்கள்
  

வரலாற்று ஆதாரங்கள்
ஓர் இனத்தின் ஓர் அரசின் ஒரு திருத்தலத்தின் வரலாற்றினை எழுதப்புகுபவர் அவ்வரலாற்றினை பல்வகையாக ஆராய்தல் வழக்கு. புதைபொருள் ஆய்வு, கட்வெட்டுக்கள், செப்பேடுகள், எழுத்தாவணங்கள் என்றின்ன ஆதாரங்களை ஆய்வுசெய்வர். அரசுக்கோ அன்றி அரசரால் கட்டிவிக்கப்பெற்ற திருக்கோயில்களுக்கோ மேற்குறிப்பிடப்பட்ட ஆதாரங்கள் இருக்கும். மெய்க்கீர்த்தி செப்பும்; சிலாசனங்கள் ழூலம்  அவற்றை நாம் அறிந்து கொள்ளலாம். மக்களால் தாபிக்கப்படும் கோயில்களில் வரலாற்று ஆதாரங்களைப்பெறுதலரிது.
கர்ணபரம்பரைக் கதைகளும், பதிவு செய்யப்பட்ட எழுத்தாவணங்களும் தான் வரலாற்றை எழுத துணைநிற்பன. அம்பிகையின் திருத்தல வரலாற்றை நாம் நிறைவு செய்யக் கிடப்பவை ஒல்லாந்தர் ஆட்சியின் போது அவர்களால் வரி வாங்குவதற்காக எழுதிவைக்கப் பெற்ற தோம்பு எனப்படும் எழுத்தாவணமும், உறுதிகளும், நீதிமன்ற ஆவணங்களும், பரிபாலன சபைகளின் எழுத்தாவணங்களுமே கிடைக்கப் பெற்றன. காணிகளின்பெயர், அவற்றின்பரப்பளவு, காணி உரிமையாளர் யார் என்பதும் தோம்பு ழூலம் நாம் அறியமுடியும்.

தலவரலாறு
தமிழீழதேசத்தை வன்னியமன்னர் ஆட்சி செய்தபோது அல்வாய் என்ற எமது கிராமத்தில் சில நில உடைமையாளர்கள் வல்லமை பெற்றிருந்திருக்கிறார்கள். மழவராயன், மாப்பாணன், மணிவீரன் போன்றோர் சிலர் இம்மரபிலே தோன்றியவர்தான். வீரமாப்பாணமுதலியார், குமாரவேலன், கந்தர் என்பவர்கள் அவரது புதல்வர்கள். வள்ளிநாச்சியார் அவரது ஒரே மகள். இவர் உடைச்சி என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர். விதவையும் கூட.
உடைச்சி வாழந்த காலத்தில் 'அக்கம்மா' என்றபெண் தெய்வத்தின் மாயங்கள்பற்றியும் அவரது அதீத ஆற்றல்பற்றியும் ஊர்முழுவதும் ஓரே பேச்சு.
 ஊரின் கிழக்கே மண் கொழுத்த வனமான தாழ்ந்த பிரதேசம், ஐந்நூறு ஏக்கர்வரை இருக்கும். மாரி காலத்தில் வெள்ளம் கடல் போல காட்சியளிக்கும். ஒரு குளம், ஒரு கிணறு, ஒரு குகை அந்தப்பகுதி துலுக்கண் கோட்டை எனுங் காணியில் உள்ளது. இவையாவும் மாய ñ அக்கை, மாய ñ கை என பொருள்பட அழைக்கப்படும் மாயக்கைப் பிரதேசம் இது.

மாயக்கை கதை
உடம்பே தெரியாது நீட்டிய ஒரு கையினை உடைய ஒருபெண் தெய்வம் பலி கேட்பதாக ஊரார் பேசிக் கொள்வர். பஞ்சகன்னியரைப் பலியிட்டால் அம்மாயக்கை வெள்ளிக்கடாரத்தில் பொன்தருமாம் என்பது கர்ண பரம்பரைக்கதை.
ஊடைச்சிக்கு மாய அக்கை மேல் பயபக்தி;. அவர்அடிக்கடி 'அக்கம்மா அக்கம்மா' என்று கூச்சலிடுவாராம். ஓவ்வொரு வெள்ளியும் நாச்சிமாரை தரிசிக்கப்போவாராம். அக்காலத்தில் நாட்டுக்கூத்தாக காத்தவராயன் நாடகம்பார்க்க அவர் தவறுவதில்லையாம். முத்துமாரி அவருக்குப்பிடித்த தெய்வமாக வணக்கத்திற்குரிய தெய்வமாக வந்துவிட்டதாம். நிலபுலங்கள் மிக்க குடும்பத்தில் பிறந்து விதவையாகி வெண்பட்டுடுத்தி வழிபாட்டுக்குச் செல்லும் உடைச்சி ஆண்டு தோறும் ஆடியில் மதுரை மீனாட்சியைத் தரிசிக்க தோணிமூலம் மதுரைக்குப் போவாராம். ஒரு தடவை மதுரைக்கடை வீதியில்இருந்த அழகார்ந்த ஒரு அம்மன் வெண்கலச் சிலையில் மனங்கொண்டு அதனை விலைக்கு வாங்கி; பயபக்தியுடன் ஊருக்கு எடுத்துவந்து தான் வாழ்ந்த நாற்சார வீட்டில் புனிதமான ஓரிடத்தில் வைத்து விளக்கேற்றி வழிபட்டு வந்ததாக பேசிக்கௌ;வர்.
காலதேவன் அவரது கணக்கைப் பார்ப்பதற்க்கு இடையில் தான் ஆதரித்துவரும் அம்மனை தன்பின் யார்தான் ஆதரிக்கப் போகிறார்கள்; என்ற கவலை உடைச்சியை ஆட்கொண்டது. அவர் கண்ணுறங்காத போதெல்லாம் திருவுருவச்சிந்தனைதான்.

கனவுரைத்தல்
ஒரு நாள் அம்மாளே! என்று பெருமூச்சு விட்டபடி கண்ணுறக்கமானார் உடைச்சி 'வள்ளீ கவலைப்படாதே! ஊங்கடை அந்தக்காணிஇ வேவிலந்தைக் காணி எனது தலவிருட்சமாகத் தோன்றி இரண்டும் பிணைந்து வேம்புலந்தையாக காட்சி தருகிறதே அது யாருமல்ல. வேம்பு நான் இலந்தை சிவம் என்று அறிந்துகொள். அந்தச் சிவசக்தி தலம்தான் எனக்கப்பிடித்தமானது. ஏனனை அங்கே ஒரு கொட்டில் போட்டு அதற்குள் வைத்து தினமும் விளக்கேற்றிவா! மற்றதெல்லாம் நான் பார்க்கிறேன்' என்று அந்த மூதாட்டி கூறியதும் வள்ளி கனவிலே கதைக்கிறார்.
'அம்மாளே! மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய மூன்றும் பெருந்திவரும் தலத்தில்தானே தெய்வம் குடியிருக்கும் என்று சொல்கிறார்களே! வள்ளி! விடுகவலையை நீ மாலையில் விளக்கேற்றும்போது உனது விளக்கோடு மூன்று தீபங்கள் எரிவதைக் காண்பாய். மேற்கேயுள்ளதீபம் எனது இருப்பிடத்தினைக் குறிக்கும். கிழக்குத் தீபம் நான்நீராடும்பொய்கையைக்குறிக்கம்.
மேலும் கிழக்கே தோன்றுவது எனக்கு விருப்பமான இலுப்பையைக் குறிக்கும். ஆக நாளைக்கே இதனைக் காண்பாய்! நூன் வருகிறேன்.
வள்ளி கனவுரைத்த அந்த மூதாட்டியை நித்திரையிலே வணங்கினாள். மேற்படி கனவுரைத்த செய்தி உலகெல.லாம் பரவிஇ ஊரே உடைச்சிவீட்டில் கூடிவிட்டது. 'இது கனவல்ல நினைவாக்க வேண்டியகனவு'  எனச் சான்றோர் பலர் கூறி
வேம்பிலந்தையின் கீழ் அழகான ஒரு சிறிய கொட்டில் போட்டு காணியில் நிலத்தினை மெழுகி கோலமிட்டு பூவகைகளைத் தூவி மதுரையிலிருந்து எடுத்து வரப்பட்டதும் உடைச்சி கையாலேயே குடமுழுக்காட்டி கொட்டிலின் நடுவே கொலுவிருக்கவைத்தார்கள்.
முத்துமாரி அம்மன் எனப் பெயர்சூட்டி வணங்கினார்கள். இவ்விதம் பல்லாண்டுகள் கொட்டிலில் கொழுவிருந்த அம்மன் கோயிலை உடைச்சி வம்சவழியினர் பராமரித்து வரலாயினர் என்பது நாம் கர்ணபரம்பரையாகக் கேள்விப்பட்ட சங்கதிகள். ஆனால் எழுத்தாவணமான தோம்பு இவற்றை உண்மைப்படுத்தி நிற்கின்றது. அல்வை வேவிலந்தை முத்துமாரி அம்மனைக் கற்கோயிலில் குடியிருத்திய காலம் பற்றி இனி ஆராய்வோம்.
வேவிலந்தை எனும் காணி முப்பத்திரண்டு பரப்பளவு என்றும், அதன் உரிமையாளர் நான்கு வம்சவழியினர் என்றும் உடைச்சிவம்சம் தவிர்ந்த மூன்று வம்சத்தவரும் அம்மன் திருத்தலத்திற்கு உரிமை பாராட்டக்கூடிய அனைவரையும் ஒன்றிணைத்து திருத்தலம் எழுச்சிபெறவைக்க வேண்டும் என்ற அவாவினால் ஊர் மக்கள், வேளாண்மக்கள் ஒன்று கூடி கி.பி 1876ம் ஆண்டில் ஒரு பொது நிர்வாக அமைப்பினை உருவாக்கினர் என்றும் அந்நிர்வாகம் நாற்பது உறுப்பினர்களையும் ஐந்து பேர் கொண்ட பரிபாலனசபையையும் கொண்டதாக உருவாக்கினர் என்பதை1876 ஆம் ஆண்டு பிரசித்த நொத்தாரிசு இராமலிங்கம் ஆறுமுகம் முகதாவில் முடிக்கப்பெற்ற 123Æ124 ஆம் இலக்கத்தில் முடிந்த அதிகார பத்திரத்தால் அறியமுடிகிறது.
இவ்வதிகாரம் பெற்ற சபையினர் தான் கற்திரப்பணி மூலம் கோயிலை கட்டி எழுப்ப முடிந்தது. 1928 ஆம் ஆண்டு வரை இவ்வதிகாரசபை நிறுவிய கர்ப்பக்கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இலகடியைச் சேர்ந்த தம்பிரான் அப்பா, கார்த்திகேசர் எனப்படும் பூலோகர் என்பவர்கள் முன்னின்று உழைத்தவர்கள் என்று கூறுவர்.
இவ்வேளை உடைச்சி வம்சத்தினரின் பரிபாலனத்தை எதிர்த்து கோயில் பரிபாலனம் பொதமக்களால் தெரிவுசேய்யப்பட்ட ஒரு சபையிடம் இருத்தல் வேண்டும் என்று பருத்தித்துறை நீதிமன்றில் ஒரு வழக்கு எழுந்தது.
திரு.வ. ஆறுமுக உபாத்தியாரும் மறுநால்வரும் வழக்காளிகளாக இருந்த வு.சு 457 ஆம் இலக்க வழக்கின் தீர்வைப்படி அல்வை முத்துமாரியம்மன் திருத்தலம் ஒரு பகிரங்க நம்பிக்கைச் சொத்தாக்கப்பட்டது.
அதாவது அல்வாயில் வசிக்கும் வேளாளர் பொதுமக்களால் தெரிவுசெய்யப்படும் நிர்வாகத்தினால் பரிபாலனஞ் செய்யப்பட வேண்டும் என்பதாகும். இதன் பிரகாரம் 1929-30 ஆம் ஆண்டுகளில் திரு. ஆறுமுகஉபாத்தியாரை செயலாளராகக் கொண்ட நிர்வாகம் பொறுப்பேற்றது. இக்காலத்திலேதான்  அர்த்தமண்டபத்திலிருந்து மகாமண்டபம் வரையான பகுதி திராவிட சிற்பக் கலைஞர்களின் கல்லாரிகளின் செதுக்கல் காணமாக பாரிய கற்பாறைகள் உயிர்த்துடிப்புடன் எம்முன்னே காட்சிதருகின்றன. இத்தகைய பாரியவேலைப்பாடுகள் பொதுமக்களின் பணம் கொண்டே நடைபெற்றன என்பதும் அதற்கு இயக்க சக்தியாக தன்னலம் கருதாது ஓய்வொளிச்சல் பாராது பாடுபட்டவர் வேறுயாருமல்ல கோயிலை பொதுமைச் சொத்தாக்கிய திரு.வ. ஆறுமுகஉபாத்தியாயரே.           இப்பணி நிறைவுபெற அன்றைய நிர்வாகம் அன்னாருக்கு கொடுத்த ஏகமனதான ஒத்துழைப்பும் மற்றோர் காரணமெனலாம். இன்றைய காலத்தில் அன்னார் செய்த திருப்பணியின் பெறுமதி பல லட்சங்களைத் தாண்டும் அல்லவாḷ
இவரது நிர்வாக காலத்தில் நடைபெற்ற ஒரு முக்கிய நிகழ்வு ஆலய உற்சவகாலத்தை பதினைந்தாக்கி முன்னிருந்தபடி பத்துநாட்கள் உற்சவத்தினை வேளாண் பெருமக்களுக்கும் (வேவிலந்தை நில உரிமையாளர்) ஐந்து  உற்சவங்களை வேளாண் குடிமக்களுக்கும் வழங்கி 'திருத்தலம் அல்வை மக்களின் சொத்து' என்பதை நிலைநாட்டியவரும் அமரர் ஆறுமுகனார் அவர்களேதான்.
1948ஆம் ஆண்டுக்கு முன்பு நீண்ட நெடுங்காலமாக ஆலய பரிபாலத்தை பொறுப்புணர்வுடன் இயக்கி வந்த அமரர் வ.ஆறுமுகஉபாத்தியாருக்கு வலதுகரமாக பரிபாலனத்தில் செயற்பட்டவர்கள் அமரர்களான சு.மு. வேலுப்பிள்ளை, சி.கந்தையா,ஆ. கதிர்காமத்தம்பி, தா.அப்பாபிள்ளை ஆகியோர்.
சீர்திருத்தக் கருத்துடைய அன்றைய இளைஞர் பலர் 'ஆலயத்தில் சின்னமேளம் வேண்டாம், பலியிடல் வேண்டாம், மதுபடைக்க வேண்டாம்' என கோஷமெழுப்பினர்.
இதன் பலனாக 1948இல் நடந்த மகாசபைக் கூட்டத்தில் புதிய நிர்வாகம் பொறுப்பேற்றது. இதில் அமரர் கோ. கதிரேசு தலைவராகவும், செயலாளராகவும், அமரர் க. இராமலிங்கம் பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.. இவர்களின் தர்மகர்த்தா சபையில் அமரர்களான கு. நடராசா,ஆ. கார்த்திகேசு, சு. கந்தவனம், க. சுப்பிரமணியம் ஆகியோர் காலத்திற்குக் காலம் இருந்து பெரும்பணியாற்றினர். இவர்கள் சேவையாற்றிய காலம் இருபத்து நான்கு ஆண்டுகள் இவர்களின் காலத்தில் கொடித்தம்பமண்டபம், வசந்த மண்டபம், கோபுரவாசல், மணிக்கோபுரம், விநாயகர் ஆலயம் என்பன கட்டப்பட்டன. இவையாவும் பொழிகற்களால் திராவிட சிற்பக்கலைப் பாணியில் வடிவமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இக்காலம் மீளவும் வழக்கொன்று ஆரம்பித்தது.
அது என்னவென்றால் உடைச்சியின் வம்சத்தில் வந்தவரும் ழூதூரில் மணம்;முடித்து பலகாலம் அங்கு வாழ்ந்து வந்தவருமான நாகப்பர் என்பாரின் மகன் சித்திரவேலு என்பவரால் தொடுக்கப்பட்ட வழக்கு. 'ஆலயம் பொதுமையாக்கியது தவறு' ஆலய நிர்வாகி தானேதான் என்பது வழக்கு இவர் அமரர் கோ. கதிரேசு அவர்களுக்கும் பொருளாளர் அமரர் க. இராமலிங்கம் அவர்களுக்கும் உறவுமுறையாய் இருந்தபோதும் அக்கதிரேசு பெருமகன் தள்ளாத நிலையிலும் கோடேறி ஆலயப் பொறுமையை நிலைநாட்டிய பெருமைக்குரியவரன்றோ. இவ்வழக்கு பருத்தித்துறை நீதிமன்றில்  வு.சு 44  இலக்கத்தில் நடந்தது. நீதிமன்றத்தீர்ப்பை அமரர். சுpத்திரவேலு மேற்கோட்டிற்க்கு கொண்டு போனபோதும் மேற்கோட்டு நீதிபதி வு.சு 457 வழக்கின் போது அமைக்கப்பட்ட எழுத்தாவணங்கள் இல்லாமல் இருப்பதைக் குறிப்பிட்டு நிர்வாகம் அதற்கானவற்றைச் செய்யவேண்டுமெனக்கூறி வு.சு 44 வழக்கை தள்ளுபடி செய்தார்.
மேற்படி விடயம் பல பேருக்குத் தெரியாத ஒன்றாய் இருந்து வருவதால் இங்கே குறிப்பிடவேண்டிய தேவை ஏற்பட்டது.
1972 வரை தனது தள்ளாத வயதிலும் தினசரி ஆலயக்கணிகளை தானே நின்று செய்துவந்த பரிபாலன செயலாளர் கோ.கதிரேசு பெருமகனார் தான் நிர்வாகப் பொறுப்பை புதியவர்களிடம் ஒப்படைக்க விரும்பினார். அதன் காரணமாக கூட்டப்பட்ட மகாசபைகட கூட்டத்தில் புதியநிர்வாகத்தினர் தெரிவுசெய்யப்பட்டனர்.
இந்நிர்வாகத்தில் வசதியும் வாய்ப்பும் படைத்த பலர் புதியஉறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டானர். புரிபாலன சபைத்தலைவரக அமரர்.த.தங்கராசா அவர்களும்இசெயலாளராக அமரர் சி.பாலசிங்கம் அவர்களும் அமர்த்தப்பட்டனர். இவர்கள் காலத்தில் முதன்முதல் ஆலயத்திற்கு கொடித்தம்பம் நிறுவப்பட்டமையும்'ஆலய உள்வீதிவசந்தமண்டபம் புணர் அமைப்பும் திருமுருகனுக்கு கற்கோயில் அமைக்கப்பட்டமையும் 1975இல் மகா கும்பாபிசேகம் செய்யப்பட்டதையும் ஊர் அறியும். அமரர் வ.ஆறுமுகம் நோயுற்றபோது திரு.செ.வேலும்மயிலும் செயலாளரானார். தலைவர்இபொருளாளர் பதவிகளில் மாற்றமின்றி முன்னையவர்களே தொடர்ந்து பணியாற்றினர். இவர்கள் காலத்தில் விழா உரிமையாளர்இவிழாக்கால நேரம்இநித்தியபூயைநேரம் என்பவற்றில் மக்கள் ஏற்க்கக்கூய சிலமாற்றங்களும் செய்யப்பட்டன. ஆம்பிகையின் தலப்பணிகளை அர்ப்பணிப்புடன் செய்துவந்த செயலாளர் அமரர் வே.கணேசன் அவர்கள் வருத்தமேலீட்டினால் பதவிவிலக அவ்விடத்திற்கு கணக்குப்பார்க்கும் புலமைநிறைந்த  திரு.செ.இராசா அவர்கள் நியமனம் பெற்றவர்கள்.
1989 இல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திரு.க.சபாரத்தினம் தலைவராகவும் திரு.செ.இராசா செயலாளராகவும் இதிரு.சி.கணேசமூர்த்தி பொருளாளராகவும் தெரிவானார்கள். இவர்கள் காலத்தில் ஆலய உள்வீதிச்சுவர் யாவும் சுவர் ஓவியங்களாயின. இதனால் ஆலயத்தில் தெய்வீகம் மிளிர்ந்ததது. புதிதாக ஒரு சப்பறம் செய்யப்பட்டது. அதற்க்கேற்ற 
ஒரு சகடையை சப்பஙத்திருவழா உபயகாரர்களாகிய திரு.சி.கணேசமூர்த்தியால் செய்துதரப்பட்டது. இக்காலத்தில் ஆலயத்திற்;கு ஒரு மணியும்இஐந்து வாகனங்களும் செய்யப்பட்டன.
1989முதல் துர்க்கையம்மனுக்கு வழிபட செல்ல முடியாதநிலையில் அவ்வடியார்கள் செவ்வாய்தோறும் இங்கு வழிபாட்டுக்;கு வரத்தொடங்கினர். 1993இல் நர்வாகத்தையும் இளைஞர்களையும் இணைப்பதற்கு திரு.சு.கணபதிப்பிள்ளை தலைவராக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அக்காலம் திரு.சு.சிவபாதசுந்தரம் பாருளாளராகவும்இ திரு.செ.இராசா செயலாளராகவுமிருந்தனர்.
இளைஞர்களின் எழுச்சிக்கு இடம்கொடுத்துஇ வயதான பலர் விலகிநிற்க ஆனி 1994 இல் ஓர் இடைக்கால நிர்வாகம் ஒன்பது பேருடன் தெரிவானது. இதன் தலைவராக திரு.ச.பரமேஸ்வரனும்இ செயலாளராக இரா.சோமசுந்தரமும், பொருளாளராக திரு.க.செல்லத்தம்பியும் தெரிவானார்கள். 1994இல் ஆலய வருடாந்த மஹாற்சவம் முடிவுற்றதும் 1994இல் புரட்டாதியில் ஸ்திரமான ஒர நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டது. அதன் தலைவராக திரு.ச.பரமேஸ்வரனும் செயலாளராக இரா.சோமசுந்தரமும்இ பொருளாளராக திரு.ந.நாவழகனும் தெரிவானார்கள். 7மாத காலத்தில் பலபகுதிகளிலுமுள்ள இளைஞர் சக்தியை சக்தியைப் பயன்படுத்தி தமது அயராமுயற்சியினால் இரவுபகலாக உழைத்து புணருத்தான வெலைகள் முடித்து 1995வைகாசியில்  மகாகும்பபிஸேகத்தை பிரம்மஸ்ரீ வைத்தீஸ்வரக் குருக்கள் தலைமையில் சிறப்பாக செய்வித்தபெருமை  அன்றய தலைவர் ச.பரமெஸ்வரன்இ   செயலாளராக இரா.சோமசுந்தரமும் பொருளாளராக திரு.ந.நாவழகன் ஆகியோரைச் சாரும். முன்னைய நிர்வாகம் சிறிதுசிறிதாகச் சேர்த்து வைத்திருந்த பல லட்சங்கள் 1995 கும்பாபிஸேகத்திற்கு பெரிதும் உதவின என்கின்ற பொது முன்னையவர்கட்கு பெரமகிழ்ச்சி இக்காலத்தில் நவக்கிரகமண்டபத்திற்கு அத்திவாரமிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
01.09.1996.இல் திரு.ந.நாவழகன் தனது பொருளாளர் பதவியை இராஜினாமா செய்தபோது அவ்விடத்தை நிரப்புவதற்கு ஒய்வுபெற்ற அதிபர் திரு.ந.சந்திரசேகரம் தெரிவானார். இக்காலம் திரு.வே.பரராசசிங்கம் செயலாளரானார்; நிர்வாகத்தை ஒரே குடும்பம் போன்று ஒற்றுமைப்படுத்தி வைத்தரக்கும் பொருளாளர் அவர்கள்
நிர்வாகத்தைப் பயன்படுத்தி ரூபா பத்து லட்சம் திரட்டி 1997இல் அனனதானமடம் ஒன்றை கட்டவித்தார். ஆலய தெற்குஇ மேற்கு எல்லைகள் கற்சுவர்களால் கட்டப்பட்டதால் கட்டாக்காலிகளின் தொல்லை பெருமளவு குறைந்தன. இதனால் ஆலயத்தில் சுத்தம் பேணக்கூடியதாயுள்ளது. இக்காலத்தில் நவக்கிரக மண்டபமும் கட்டப்பட்டது
1999 இல் புதிய நிர்வாகம் தெரிலானது. அதில் பழையவர்களே முக்கிய பதவியினரில் மாற்றமின்றி தெரிவானார்கள். இவ்வாலயத்திற்கு சித்திரத்தேர் ஒன்று தேவையெனக் காணப்பட்டதால் ஒரு திருப்பணிச்சபை தெரிவுசெய்யப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 11பேர் கொண்ட திருப்பணிச்சபையின் தலைவராக திரு.சி.கணேசமூர்த்தி 1999சித்திரையில் தெரிவானார். இணைச்செயலாளர்களாக திரு.இ.சோமசுந்தரம்இ திரு.க.புவனேந்திரன் ஆகியோரும் பொருளாளர் நா.சந்திரசேகரமும் தெரிவாயினர். திருப்பணிச்சபையினரின் அயராமுயற்சியினால் 1999ஆடியில் சித்திரத்தேர் ஒன்று செய்வதற்கு கால்கோளிடப்பட்டது. இலங்கையிலேயே
தலைசிறந்த சிற்பசக்கரவர்த்தி என பாராட்டப்பட்ட ஸ்தபதி திரு.ஆ.ஜீவரட்ணம் அவர்களால் பலராலும் பாராட்டுப்பெற்ற சித்திரத்தேர் ஒன்று ரூபா இருபத்தைந்து லட்சத்தில் செய்யப்பட்டு 2001 ஆடியில் வெள்ளோட்டத்திற்கு விடப்பட்டது. இதனைத்தொடர்ந்து 5லட்சத்தில் ஆயிரம் அடி நீளமான தேரோடும் தார்வீதியும் முப்பது லட்சத்தில் தேர்த்தரிப்பிடமும் செய்யப்பட்டன. பாழடைந்த நிலையிலிருந்த கல்யாண மணடபவேலை 2002 இல் சிறிதுசிதாக ஆரம்பிக்கப்பட்டு கூரைவேலைகள் முடிக்கப்பட்டன. 2003 இல் றூபின்ஸ் நிறுவனத்தார் கல்யாணமண்டப மிகுதிவேலைகளை பூர்த்திசெய்தனர். இம்மண்டபம் இலங்கையிலேயே மிகச்சிறந்த அழகான கவர்ச்சியான ஒரு மண்டபம் என பலரும் பாராட்டும் வண்ணம் வேலைகள் அமைந்துள்ளன.
2004 இல் 5வருடங்களுக்கு ஒரு முறை தெரிவுசெய்யப்படும் தலைவராக திரு.சி.கணேசமூர்த்தியும் செயலாளராக திரு.வே.பரராசசிங்கமும்இ பொருளாளரக் நா.சந்திரசேகரமும் தெரிவுசெய்யப்பட்டனர். பொறுமை சகிப்புத்தன்மை, விடாமுயற்சியுடைய நிர்வாகிகள் ஆலயவளர்ச்சியில் அக்கறை செலுத்தினர். வுடமராட்சியில் பிரசித்திபெற்ற அம்மன்ஆலயங்களில் ஒன்றான அல்வாய்வேவிலந்தை ஸ்ரீமுத்துமாரிஅம்மனுக்கு ஓர் இராஜகோபுரமும் அதோடு இணைந்த மணிமண்டபமும் இல்லையே என கவலை கொண்டனர். எதனையும் துணிந்து செய்யும் ஆற்றல் படைத்த றூபின்ஸ் சிவசேகரம் அவர்களின் நிர்வாகத்தைப் பயன்படுத்தி ரூபா பத்து லட்சம் திரட்டி 1997இல் அனனதானமடம் ஒன்றை கட்டவித்தார். ஆலய தெற்குஇ மேற்கு எல்லைகள் கற்சுவர்களால் கட்டப்பட்டதால் கட்டாக்காலிகளின் தொல்லை பெருமளவு குறைந்தன. இதனால் ஆலயத்தில் சுத்தம் பேணக்கூடியதாயுள்ளது. இக்காலத்தில் நவக்கிரக மண்டபமும் கட்டப்பட்டது
1999 இல் புதிய நிர்வாகம் தெரிலானது. அதில் பழையவர்களே முக்கிய பதவியினரில் மாற்றமின்றி தெரிவானார்கள். இவ்வாலயத்திற்கு சித்திரத்தேர் ஒன்று தேவையெனக் காணப்பட்டதால் ஒரு திருப்பணிச்சபை தெரிவுசெய்யப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 11பேர் கொண்ட திருப்பணிச்சபையின் தலைவராக திரு.சி.கணேசமூர்த்தி 1999சித்திரையில் தெரிவானார். இணைச்செயலாளர்களாக திரு.இ.சோமசுந்தரம்இ திரு.க.புவனேந்திரன் ஆகியோரும் பொருளாளர் நா.சந்திரசேகரமும் தெரிவாயினர். திருப்பணிச்சபையினரின் அயராமுயற்சியினால் 1999ஆடியில் சித்திரத்தேர் ஒன்று செய்வதற்கு கால்கோளிடப்பட்டது. இலங்கையிலேயே
தலைசிறந்த சிற்பசக்கரவர்த்தி என பாராட்டப்பட்ட ஸ்தபதி திரு.ஆ.ஜீவரட்ணம் அவர்களால் பலராலும் பாராட்டுப்பெற்ற சித்திரத்தேர் ஒன்று ரூபா இருபத்தைந்து லட்சத்தில் செய்யப்பட்டு 2001 ஆடியில் வெள்ளோட்டத்திற்கு விடப்பட்டது. இதனைத்தொடர்ந்து 5லட்சத்தில் ஆயிரம் அடி நீளமான தேரோடும் தார்வீதியும் முப்பது லட்சத்தில் தேர்த்தரிப்பிடமும் செய்யப்பட்டன. பாழடைந்த நிலையிலிருந்த கல்யாண மணடபவேலை 2002 இல் சிறிதுசிதாக ஆரம்பிக்கப்பட்டு கூரைவேலைகள் முடிக்கப்பட்டன. 2003 இல் றூபின்ஸ் நிறுவனத்தார் கல்யாணமண்டப மிகுதிவேலைகளை பூர்த்திசெய்தனர். இம்மண்டபம் இலங்கையிலேயே மிகச்சிறந்த அழகான கவர்ச்சியான ஒரு மண்டபம் என பலரும் பாராட்டும் வண்ணம் வேலைகள் அமைந்துள்ளன.
2004 இல் 5வருடங்களுக்கு ஒரு முறை தெரிவுசெய்யப்படும் தலைவராக திரு.சி.கணேசமூர்த்தியும் செயலாளராக திரு.வே.பரராசசிங்கமும்இ பொருளாளரக் நா.சந்திரசேகரமும் தெரிவுசெய்யப்பட்டனர். பொறுமை சகிப்புத்தன்மை, விடாமுயற்சியுடைய நிர்வாகிகள் ஆலயவளர்ச்சியில் அக்கறை செலுத்தினர். வுடமராட்சியில் பிரசித்திபெற்ற அம்மன்ஆலயங்களில் ஒன்றான அல்வாய்வேவிலந்தை ஸ்ரீமுத்துமாரிஅம்மனுக்கு ஓர் இராஜகோபுரமும் அதோடு இணைந்த மணிமண்டபமும் இல்லையே என கவலை கொண்டனர். எதனையும் துணிந்து செய்யும் ஆற்றல் படைத்த றூபின்ஸ் சிவசேகரம் அவர்களின் நம்பிக்கைக்குரியவரான  நம் தலைவரும் க.புவனேந்திரனும் வாய் வைத்தனர். அம்பாளே என்னைவாழவைத்த  தெய்வம் எனக்கூறும் திரு.சி.சிவசேகரம் மகிழ்ந்தார். ஆலய நிதிநிலையை நன்கு அறிந்திருந்தும்கூடஇ இராஜகோபுரவேலையை மிக வேகமாக ஆரம்பித்தார். அவரது நம்பிக்கைக்கு பங்கமேற்படாதவாறு நிர்வாகமும் நடந்துகொண்டது பாராட்டப்பட வேண்டியது. பல அடியார்கள் ஆலயம் புதுப்பொலிவு பெறவேண்டும் என்ற பெருநோக்கேடு அள்ளிஅள்ளி கொடுத்து வருவது அவர்கள் அம்பிகைமேல் கொண்ட நம்பிக்கையைக் காட்டுகின்றது.  
இன்றைய நிலையில் அம்பிகையின் திருத்தலம் எவ்வாறு எழுச்சியுற்று தோற்றமளிக்கிறது என்பதை கண்ணாரக் காண்கின்றோம். அருளாட்சி புரியும் எம் அன்னை  ழூல ழூர்த்தியாம் கர்ப்பக்கிரகத்தில் கொலு வீற்றிருப்பதையும் அன்னையின் திருவடி நிழலுக்கு ஒப்பாக  தலத்தில் ஓங்கிவளர்ந்திருக்கும் மராமரங்களாக நிழலடிக்கும் தலவிருட்சங்களையும் நான்கு முழத்தில் அற்புதமாகச்சுரக்கும் தீர்த்தக்கேணியையும் நாம் கண்டுகளிக்கிறோம். இவையாவும் அன்னை கனவுரைத்த சக்திகள்.                       
மேலும் மிகக்குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப்பெற்ற வானுயர் இராஐகோபுரம், மணிக்கோபுரம், மணிமண்டபம் போன்ற அதிசயிக்கத்தக்க திருப்பணிகள் நிகழ்ந்து நாம் 08.06.2006 இல் கும்பாவிNஷத்திலும் கலந்து அம்பிகையின் திருவருளுக்கு ஆளாகி இருக்கின்றோம். 
இராஐகோபுரம் அத்திவாரத்தோடு நின்றுவிடுமென பேசிக்கொண்டவர்களும் இல்லாமலில்லை. ஆனால் நடந்தது என்ன இவையெல்லாம் மாரியின் செயலல்லாது வேறென்ன ஆம் பராசக்தியாம் மாரி அனைத்தையும்  செய்வித்தாள். புரிபாலனசபை  ஓய்வு உறக்கமின்றி  துரிதமாக செயற்பட்டது. உள்ளூர் அடியார்கள் இயன்றதைக் கிள்ளிக்கொடுத்தார்கள. புலம்பெயர்ந்த வாலிபர் சிலரை அம்பிகை செல்வந்தர்களாக்கினாள். அவர்கள் நான் நீ என்று வாரி வழங்கினார்கள். இலட்சம்; இலட்சமாக. இவைபோன்ற அடிப்படைக் காரணங்களால் விNஷடமாகக் கட்டுமானப்பணியை ஏற்ற றூபின்ஸ் நிறுவனர் சி.சிவசேகரம் அவர்களுக்கும் பரிபாலன சபையினருக்கும் பரஸ்பரம் இருந்த நம்பிக்கையினால்தான் அம்பிகை வீற்றிருக்கும் கோயில் இன்று கலைக்கோயிலாக காட்சியளிக்கின்றது.
தற்போது நிர்வாகமும் பரிபாலனசபையும் மனமொத்து திருப்பணிகளையும்  சிறப்பாகச் செய்து வருகிறார்கள். என ஊர்மக்கள் பேசிக்கொள்கின்றனர்.அதற்கான காரணங்களும் இல்லாமலில்லை. 
குறுகியகாலத்துள் திட்டமிட்ட ஆலயத்திருப்பணிகள் செய்துமுடிக்க வேண்டும் என்கின்ற சபையினரின் ஆர்வம், அதற்கேற்பவரும் வருவாய,; வழித்துறைகள்;; அப்பாட்டமான வரவுசெலவுக் கணக்குகள,; மக்கள் அதிகம், பலபலவிழாக்கள், இலட்சசங்காபிNஷகங்கள். மேலாக வேதஆகம சித்தாந்த நெறியில் பூசை செய்துவரும் ஆலயபிரதமகுருக்களாக யாவராலும் சிலாகிக்கப்பட்டுவரும் அறவாழி அந்தணராக விளங்கும் மகாகனம் பொருந்திய சுரேஸ்வரக்குருக்களின் மனங்கனிந்த ஆலயபணிகள் இவை அனைத்தும் மக்களால் மனங்கொள்ளப்பட்டவை என்க.
சுபையினரின் தாரக மந்திரம் 'கணக்கென்றால் கணக்குத்தான்' 'நேரம் என்றால் நேரம்தான்' 'சொன்னதென்றால் சொன்னதுதான்' பல லட்சம் செலவில் ஆலயசித்திரத்தேரும், தேர்மாளிகையும், தார்வீதியும், நவக்கிரகமண்டபமும், அன்னதானமடமும், கலாசாரமண்டபமும், இராஐகோபுரமும், மணிமண்டபமும,; தீர்த்தக்கேணியும,; கண்டாமணிக்கோபுரமும், காரியாலயமும், புதியமடப்பள்ளி அறைகளும் மாபிள்பதிக்கப்பட்டவீதியும் நிர்வாக சாதனைகளாகும். இவையாவும் சில கோடிரூபாய்களை விழுங்கியிருக்கும் என்பதை ஊர் அறியும். உலகமும் அறிந்து கொள்ளும்.
ஆல்வை வேவிலந்தை முத்துமாரியம்மன் திருத்தலம் இன்று வடமராட்சிப் பகுதியிலுள்ள வல்லிபுர ஆழ்வார் திருத்தலம், சந்நிதி முருகன் திருத்தலம் போல் அனைத்து மக்களும் ஆனந்தம் பொங்க வழிபடுகின்ற ஐனரஞ்சிதமான திருத்தலம் எனக்கூறுதல் மிகையாகாது.