ஆலய பரிபாலன சபையினரது வலைப்பூ

அல்வாய் வேவிலந்தை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்

Wednesday, August 14, 2013

ஆடிச் செவ்வாய் (13.08.2013)



இன்றைய தினம் ஆடி இறுதிச் செவ்வாய் நீகழ்வானது மிகுந்த கோலாகலமாக இடம் பெற்றது. இதில் பல பெண் அடியவர்கள் கற்பூரச்சட்டி எடுத்துவர முத்துமாரி அம்மன் ஊள்வீதி மற்றும் வெளிவீதி வலம் வந்தார். நேற்றைய தினம் பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தவர்களின் ஏற்பாட்டில் பன்னிரண்டு ஜோதிலிங்க இரத பவனியில் ஓர் இரதமான காசி லிங்க ரதம் எமது ஆலயத்தில் தங்கி இன்றையதினம் அமபாள் அடியவர்களுக்க ஜோதிலிங்க தரிசனம் வழங்கியது குறிப்பிடத்தக்க விடையமாகும். மதிய நேர பூஜை முடிந்ததும் பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தவர்களால் இளைஞர் மற்றும் யுவதிகளிற்கான "நான் யார்? " எனும் தலைப்பில் 45 நிமிட நிகழ்வும் இடம்பெற்றது.