ஆலய பரிபாலன சபையினரது வலைப்பூ

அல்வாய் வேவிலந்தை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்

Tuesday, July 30, 2013

மேலதிக இடுகை

வேட்டை,  சப்பற திருவிழா மற்றும் இளைஞர் விழா போன்றன முதலிலேயே இடுகை இடப்பட்டது. ஆனாலும் அதில் தவறிய சில படங்களை மேலதிகமான படங்களாக இவ் இடுகையில் வெளியிடுகின்றேன்.


 வேட்டை









சப்பறம்












இளைஞர் விழா







Friday, July 26, 2013

பூங்காவனமும் இளைஞர் விழாவும்


அல்வாய் இந்துவாலிபர் சங்க இளைஞர்களது உபயத்தில் பூங்காவனமும் இளைஞர் விழாவும் நடைபெற்றது. காலை 1008 சங்காபிசேகமும் மாலை பூங்காவனத்திருவிழாவும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரவு நிகழ்வாக மகோற்சவக் குருக்களான சுரேஸ்வரக் குருக்களின் ஆசியுரையும் அதனை தொடர்ந்து வெளிநாட்டில் தற்போது வசிக்கும் செல்வி.கீர்த்தனா என்பவரது பாதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. அதன்பின் 'இன்றைய காலத்தில் சமூகத்திற்கு பெரும் பங்காற்றுவது முதியவர்களா அல்லது இளையவர்களா' என்ற தலைப்பில் பட்டிமன்றமும் அதன்பின் இறுதி நிகழ்வாக சாரங்கா இசைக்குழுவின் இசைக்கச்சேரியும் நடைபெற்றது. இவ் இசைக்கச்சேரி சிறப்பாக நடைபெற்று நிறைவு பெறும் தறுவாயில் ............


















15ம் திருவிழா - தீர்த்தம், கொடியிறக்கம்


திர்தத் திருவிழாவன்று அதிகாலை, முத்துமாரி அம்பாள் ஐந்து தலை பாம்பின்மீதமர்ந்து உள்வீதி வலம்வந்து  சரியாக 4 மணிக்கு  வங்கக்கடலை நோக்கி புறப்பட்டார். சரியாக 6 மணியளவில் இன்பர்சிட்டி கடலை வந்தடைந்த முத்துமாரி இன்பர்சிட்டி அடியவர்களால் தயாரிக்கப்ட்ட இரு படகுகளை இணைத்து வாழைமரங்களால் அலங்கரித்து அதனை ஓர் தெப்பம் போன்று உருவாக்கி அதன்மீது அம்பாளை வீற்றிருக்கச் செய்து தீர்ததமாட கடலுக்குள் அழைத்துச் சென்றது இதுவே முதல் தடவையும் ஓர் சிறப்பான செயலுமாகும். எனவே இவ்வாறு சிறப்பித்த இன்பர்சிட்டி இளைஞர்கள் தாமே அம்பாளை படகில் ஏற்றி கடலுக்குள் சென்றதற்கு தொண்டர்கள் நாமும் ஒத்துழைத்தோம்.

அம்பாள் தீர்தமாடிவிட்டு பூஜைகளையும் முடித்துக்கொண்டு இன்பர்சிட்டி விநாயகர் ஆலயத்தை நோக்கி புறப்பட்டார். போகும் வழியில் பல அடியவர்கள் தம் வீட்டு வாசலின் முன் நிறைகுடம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு அம்பாளை மகிழ்வித்ததோடு அவல், கடலை போன்றவற்றை வழங்கி எமது வயிற்றையும் மகிழ்வித்தனர். விநாயகர் கோவிலுக்கு அருகில் இருக்கும் வீட்டு அடியவர்கள் எமக்கு தேநீர் அழித்து தாகம் மற்றும் களைப்பை போக்கியது மிகுந்த சந்தோசம். இவர்கள் ஒவ்வொரு முறையும் இவ்வாறு வளங்குபவர்கள் என்பதை குறிப்பிட்டாகவேண்டும். அதனை அடுத்து அமபாள் இன்பர்சிட்டி விநாயகர்  ஆலயத்தை வந்தடைந்து சிறிது நேரம் இளைப்பாறியபின் மீண்டும் கோவிலை நோக்கி புறப்பட்டார். இன்பர்சிட்டி விநாயகர் ஆலயத்தில் அம்பாளை அதிகநேரம் காக்கவைக்ககூடாது என்பதற்காக அல்வாய் இந்து வாலிபர் சங்க இளைஞர்கள் அம்பாள் வருவதற்கு முன்பாகவே தமக்கு காவடி செதில்களை ஏற்றி காவடி ஆடத்தொடங்கிவிட்டனர்.

இவ்வாறு அம்பாளை அழைத்துக்கொண்டு அம்பாளிற்கு முன் ஆனந்தக்காவடிகள் ஆடியபடி வீரபத்திரர் கோவிலை வந்தடைந்து பின் பெரிய தம்பிரான் ஆலயம் (வடஅல்வாய் முருகன் ஆலயம்) வந்தடைந்து அங்கும் சிறிது நேரம் இளைப்பாற காவடி ஆட்டங்கள் சிறப்பாக ஆட காவடி எடுத்த அடியவர்களிற்கு முன் சில இளைஞர்கள் அவர்களிற்கு உருவேற்ற வேப்பிலையோடு ஆடினார்கள். இவ்வாறு காவடியை பார்ப்பதற்கென்றே வந்த அடியவர்கூட்டம் மிக சிறப்பளித்தது.

இவ்வாறு அடியவர்களிற்கு அவர்களைதேடிச் சென்று அருள்வளங்கிய எமது முத்துமாரி அன்னை தனது இருப்பிடமான வேவிலந்தை பதிக்கு வந்து வெளிவீதி வலம் வந்து தன் சிம்மாசனம் அமைந்துள்ள வசந்த மண்டபத்திற்கு சென்று அமர்ந்து தீர்த்தோற்சவத்தை நிறைவு செய்தார்.

மாலை 5.30 மணியளவில் கொடியிறக்கம் ஆரம்பமானது அமபாள் தன் திருவிழாவை நிறைவுசெய்யும் வைபமான கொடியிறக்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று முடிந்ததும் அமபாள் உள்வீதி மற்றும் வெளி வீதி வலம் வந்து வசந்தமண்டபத்தை அடைந்து அனைத்து பூஜைகளையும் நிறைவுசெய்தபின் நிர்வாகத்தினரையும் அதேபோல் தொண்டர்களையும் கௌரவிக்கும் முகமாக ஆலய மகோற்சவ குருக்களான சுரேஸ்வர குருக்கள் அவர்கள் எமக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இது அவரது பெருந்தன்மையை பறைசாற்றும் ஒர் நிகழ்வாகும். எம்மை கௌரவித்த சுரேஸ்வரக் குருக்களை தொண்டர்களாகிய நாமும் அவரை கௌரவிக்கும் முகமாக அவரிற்கென ஓர் பொன்னாடை போர்தி அவரை பீடத்தின் மீது அமரச்செய்து வேவிலந்தை முத்துமாரி அன்னையின் தீரு வீதியான வெளிவீதியை சுரேஸ்வரக்குருக்களை தோள்மீது சுமந்து வலம் வந்தோம்.