ஆலய பரிபாலன சபையினரது வலைப்பூ

அல்வாய் வேவிலந்தை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்

Friday, July 26, 2013

14ம் திருவிழா - தேர்


தேர் திருவிழாவானது காலை 8.30 மணியளவில் ஆரம்பமானது. முத்துமாரி அம்பாள் உக்கிரரூபினியாக உள்வீதி வலம் வந்து; தேரேறி வெளிவீதி வலம் வர பல்லாயிரக்கணக்கான பக்த அடியவர்கள் தேர் வடம் பிடித்து அம்பாளை அழைத்து வந்தனர். இதனை காணவந்த அடியவர்களின் கூட்டம் அலைமேதியது. அதிலும் பிள்ளையார், முருகனும் அம்பாளை போன்றே சித்திரத்தேரில் வலம் வந்த காட்சியினை காண நாம் முப்பிறப்பிலே நல்ல புண்ணியம் செய்திருக்கவேண்டும். இதனை சிறப்பிக்கும் வகையில் எமது தொண்டர்கள் தேர்முட்டியின் மேல் நின்று தாமரைப்பூ இதழ்களை தேரின்மேல் தூவியது மிகுந்த ஒரு அழகிய தோற்றம். அதோடு பல அடியவர்கள் ஆணந்த காவடியுடனும், தூக்கு காவடி, பறவைக் காவடி என பல வகையான காவடிகளும் அதனைபோல பெண் அடியவர்கள் கரகாட்டம், பற்செம்பு என்பனவற்றை எடுத்து தமது நேர்திதக்கடனை நிறைவு செய்தனர்.